அமைதி மற்றும் பேரானந்தம். - ​​ PEACE AND BLISSFUL
- Mr.​​ 
ஜாஹிர்​​ உசேன்

 

ஆழ்ந்த ஓய்வு என்பது பேரின்பம். கடவுள் மட்டுமே இருக்கிறார் என்பதை புரிந்து கொள்வது சாத்தியமான ஒரு ஆழ்ந்த ஒய்வாகும். கடவுள் மட்டுமே இருக்கிறார் என்ற மறுக்க முடியாத உண்மை அல்லது அனுபவம் சமாதி எனப்படும். (சமநிலை அமைதி).​​ இந்த சமாதி தான் திறமை,​​ பலம் மற்றும் ஒழுக்கம் எல்லாவற்றிக்கும் தாய்.


மிகுந்த உலகாதாய மனிதருக்கு கூட சமாதி நிலை தேவைப் படுகிறது. ஏனெனில் பலம் மற்றும் தகுதியைப் பெற அவர் முயற்சி செய்கிறார்.

சமாதி நிலையை அடைய நமக்கு ​​ முயற்சி அல்லது திறமைகள்,​​ பலம் அல்லது தகுதிகள் எதுவும் தேவையில்லை.​​ 

 

எல்லா வகையான உடல் சார்ந்த,​​ மனம் சார்ந்த நடவடிக்கைகளிலிந்து பின்வாங்குவது தான் ஒய்வு. நமது அமைப்பு முறையில் இது தூக்கம் அல்லது உறக்கம் என்று அமைந்துள்ளது.​​ 

உறக்கம் என்பது செயல்களின் சிறந்த நண்பன்.​​ 

(சமநிலை அமைதி). சமாதி உள்ளார்ந்த ஒய்வு.

சமாதி என்பது ஈருலக வாழ்வின் சிறந்த நண்பன்.

 

உறக்கம் என்பது செயல்களின் சிறந்த நண்பன். சமாதி என்பது ஈருலக வாழ்வின் சிறந்த நண்பன்.

 

நாம் நமது முழு சக்தியுடனும் உயிரோட்டத்துடனும் செயல்பட (சமநிலை அமைதி) சமாதி மேற்கொள்வது தவிர்க்க முடியாததாகும்.​​ 

அமைதியற்ற மன உளைச்சல் தான் சமாதி நிலையை தடுக்கிறது.

 

அமைதியற்ற மன உளைச்சல் தான் சமாதி தடுக்கின்றது என்பதை நாம் அறிவோம். எத்தனை வகையான மன உளைச்சல்கள் உள்ளன. அதற்கான பரிகாரங்கள் என்னென்ன.?


1.​​ 
இடம். நாம் இருக்கும் இடத்தால் ஏற்படுகின்ற மன உளைச்சல். அந்த இடத்தைவிட்டு நகர்ந்து விட்டால் இந்த மன உளைச்சலில் இருந்து நீங்கி விட்டதாக நாம் உணரலாம். அந்த இடத்தில் இருக்கும் நபர்களின் பேச்சுக்களாலும்,​​ செயல்பாடுகளாலும் அல்லது சுற்றுப்புற சூழ்நிலைகளாலும் இந்த மன உளைச்சலுக்கு நாம் ஆளாகின்றோம். இதற்கு பரிகாரம் நம்முடைய எண்ணப் போக்குகளை மாற்றக்கூடிய நேர்மறை எண்ணங்களை வளர்க்கக்கூடிய சிறு குழந்தைகளுடன் நேரத்தை செலவு செய்வது அல்லது கடவுளின் தன்மை பெயர்களை உச்சாடனம் செய்வது திரும்பத் திரும்ப உணர்ந்து கூறுவது மற்றும் நேர்மையான சிறந்த விஷயங்களைப் பற்றி பேசுவது. அவ்வாறு செய்யும் போது அந்த இடத்தில் ஏற்படும் அதிர்வலைகள் நம்முடைய மன உளைச்சலை போக்க வல்லது.(அல்குர்ஆன்​​ 2:114 4:97,100,140 6:17)

2)​​ உணவு மற்றும் உடல். - ​​ இரண்டாவது மன உளைச்சல் நம் உடலால் ஏற்படுகின்றது. தவறான உணவு,​​ தவறான நேரத்தில் உணவு உண்பது,​​ உடற்பயிற்சி,​​ சரீர உழைப்பு செய்யாமலிருப்பது,​​ ஓய்வில்லாமல் அதிகமான உழைப்பில் ஈடுபடுவது,​​ இவையாவும் உடல் சார்ந்த மன உளைச்சலுக்கு காரணமாகின்றன.​​ 

இதற்கு பரிகாரம் சரீர உழைப்பு,​​ உடற்பயிற்சி,​​ மிதமான உழைப்பு,​​ எந்த உணவு எளிதில் ஜீரணமாகும் என்பதை தெரிந்து அதை சரியான நேரத்தில்,​​ சரியான அளவு உண்பது மட்டுமே ஆகும்.(அல்குர்ஆன்​​ 2:57,60,168,  5:88, 6:141, 7:31,160, 8:69, 20:81, 23:51/4:95 9:81,83,87, 21:94, 48:11, 90:4)​​ 

3)​​ மனம் - மூன்றாவது மன உளைச்சல் மன அமைதி இல்லாததால் ஏற்படுகின்றது. பேராசை அல்லது பேராவல்,அழுத்தமான எண்ணங்கள்,​​ விருப்பு வெறுப்புகள்,​​ இதற்கு காரணமாகின்றன. வாழ்க்கையை ஒரு விரிந்த கண்ணோட்டத்தில் பார்த்தல்,​​ நாம் யார் என்பது பற்றிய அறிவு,​​ எதுவும் நிலை இல்லை என்ற ஞானம் ஒன்றுதான் இத்தகைய மன உளைச்சலையும் குணப்படுத்த முடியும்.​​ எல்லாவற்றையும் ​​ பெற்றுவிட்டால் பின்னர் என்ன இருக்கின்றது?

மரணம் அல்லது வாழ்வைப் பற்றிய ஞானம்,​​ நாம் யார்?​​ என்பதன் மீதான தெளிவான புரிந்து கொள்ளுதல்,​​ புரிந்து கொள்ளுதல் உடன் கூடிய நம்பிக்கை,​​ தெய்வீகத்தின் மீது நம்பிக்கை கடவுளின் தன்மை பெயர்களின் ​​ மீதான திடமான நம்பிக்கை இவைதான் இந்த வகையான மன உளைச்சலை சாந்தப்படுத்தும்.(அல்குர்ஆன்​​ 12:53, 25:43,44 45:23,24)

4.​​ உணர்ச்சி - நான்காவது உணர்ச்சி வேகத்தால் ஏற்படும் மன உளைச்சல்.

கோபம்,​​ பொறாமை,​​ அதீதமான ஆசை,​​ பந்த பாசங்களுக்கு கட்டுப்பட்டு கடவுளின் வழிகாட்டுதலுக்கு செவி சாய்க்காமல் இருப்பது,​​ உலகத்தில் நிரந்தரமாக தங்கி விடுவோம் என்ற எண்ணங்கள் இதனால்தான் நாம் உணர்ச்சிவசப் படுகின்றோம்.

எத்தகைய ஆழ்ந்த அறிவும் இங்கு பயன்படாது. தியானப் பயிற்சி அல்லது மூச்சுப் பயிற்சியின் மூலம் மட்டுமே தீர்வை பெற முடியும். உணர்ச்சி வேகத்தால் ஏற்படும் மன உளைச்சலில் தியானப்பயிற்சி மூலம் மட்டுமே முழுமையாக நீக்கப்படும். (அல் குர்ஆன்​​ 3:17, 9:112, 17:78,79,80,81,82,  25:63-67 39:9, 50:39,40, 73:2,4,6,20)​​ 


5.ஆன்மா - ஐந்தாவது அரிதானது. அது ஆன்மாவின் உளைச்சல்,​​ 

அனைத்தும் வெறுமையாகவும்,​​ அர்த்தமற்றதாகும் தெரிந்தால்,​​ நீங்கள் பாக்கியவான்கள்,அந்த எதிர்பார்ப்பும்,​​ தவிப்பும் தான் ஆன்மாவின் உளைச்சல்,​​ அதை போக்க முயற்சிக்க வேண்டாம்,​​ அதை ஆரத் தழுவிக் கொள்ளலாம்,​​ ஏற்றுக்கொள்ளலாம்,​​ அதை வரவேற்று கொள்ளலாம். ​​ 

ஆன்மாவின் உளைச்சல் மட்டுமே நமக்குள் உண்மையான பிரார்த்தனையை கொண்டுவரமுடியும். இது முழு நிறைவு மற்றும் வாழ்வில் அற்புதங்களை கொண்டு வரும். கடவுளுடன் உள்ளார்ந்து இருப்பதை பெறுவது மிக அரிதானது,​​ மதிப்புமிக்கது,​​ ஆன்மாவின் உளைச்சலை நன்மக்களுடன் ​​ இருப்பதும் அவருடன் சேர்ந்து செயல்படுவதும் சாந்தப்படுத்தும்.